கலைஞானி கமல்
அபுதாபி… 25.6.22 மாலை
இந்திய சமூக கலாச்சார மையம் அரங்கில்,
நடிகர், தயாரிப்பாளர் மற்றும், இயக்குநர்
கமல்ஹாஸன் அவர்களுடன் -சிறப்பு சந்திப்பு. IBPG – Indian business and professional group, The institute of Charted accountants of India Abu Dhabi chapters Ltd.,ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு.
விழா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்
தம்பி Firdhous Basha வின்
அன்பு அழைப்பின் பேரில், தம்பி Kausar Baig உடன் , அபுதாபி நிகழ்வுக்கு துபாயிருந்து, PCR சோதனை செய்து, Al Hosn செயலியில் பச்சைவண்ணம் ஒளிரச்செய்து… உலகநாயகனைக் காண ஒரு பயணம்.
தொற்றின் அதிகரிப்பு மற்றும்
சில நடைமுறை சிக்கல்கள் காரணம், விழா தாமதமானது. எட்டு மணியளவில் மேடையேறிய இந்தியத் திரையுலகின் அறுபதாண்டு கால ஆச்சர்யம் கமல்ஹாஸன், ஊடகவியலாளர் விக்ரந்த்தின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தார். இந்திய சமூக கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழா ஆதலால் ஆங்கில உரையாடல்.
பதினைந்தே நிமிடங்கள். அரங்கத்தில் கரவொலி அதிர அதிர…
இந்திய சமூக கலாச்சார மையத்தின் தலைவர் அன்பிற்குரிய நடராஜன் அவர்களின் உரைக்குக் கூட அவகாசமின்றி அவசர அவசரமாக நிறைவுற்ற நிகழ்விலும்,
தம்பி ஃபிர்தௌஸின் தொடர் முனைப்பால், முயற்சியால் அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் சார்பில், குழும எழுத்தாளர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள் மேடையில் அன்பளிக்கப் பட்டன. நித்யா குமார் பரிசை சே குமாரின் “ திருவிழா” மற்றும் எனது “மெல்லச் சிறகசைத்து” -இரண்டு புத்தகங்களையும் பெற்றுக்கொண்டு, ஒரு கணம் இரண்டு புத்தகங்களின் முகப்பையும் ஒவ்வொன்றாகப் பார்த்து, புன்னகைத்து உதவியாளரிடம் கொடுத்த உலகநாயகன்…
“ இத்தகைய எனது அமீரக வரவுகளும் உங்களுடனான உரையாடல்களும் இனி அடிக்கடி நிகழும்” என உறுதியளித்து, கையசைத்து விடை பெற்றார்.
அடுத்த சில நாட்கள் அவர் அமீரக விழாக்களின் நிமித்தம் இங்கு…
இரவு 9.30மணிக்கு விழா நிறைவுற்றதன் பின்னர் நடராஜன் sir அவர்களின் அலுவலகம் சென்று வாழ்த்தி உரையாடி, செட்டிநாடு உணவகத்தில் அன்பின் விருந்தில், தம்பி ஃபிர்தௌஸின் பேரன்பில் கரைந்து, கடந்த 2004-ல் என்னை அமீரகத்திற்கு வரவேற்று,
2010 வரை வாய்ப்பளித்து, வளம் சேர்த்த அபுதாபி நகரின் நினைவுகளின் அடுக்குகளை மனதில் சுமந்து இரவு 11.45 மணிக்கு கிளம்பினோம்.
தம்பி கௌஸருடன் உரையாடியவாறே அதிக வாகனப் போக்குவரத்தில்லாத நெடுஞ்சாலையில் பயணம் செய்து,
துபாய் அடைந்த போது பின்னிரவு 1.30.
இனிய, அழகான மனதிற்கு இதமான நாள்.
=====
தீராத எனது சகல கலை விழைவுகளுக்குமான ஆதாரம்… தோற்றுவாய். தேளுரசும் அணுக்கத்தில் எனது நாற்பதாண்டு கால ஆதர்ச நாயகன்…
தொடும் தொலைவில் காணக்கிடைத்த அதே புன்னகை…
அவர் கைகளில் எங்களின் புத்தகங்கள்…
மேடைக்குப் படியேறிச் சென்று பார்வையாளர்களை நோக்கித் திரும்பி கையசைத்து புன்னகைத்த அன்பு
கமல்ஹாஸனின்… பார்வை என்மீது பதிந்து சென்ற அந்த ஒற்றை பிரத்தியேக
கணத்தை… இழையாகப் பிரித்து இப்போதைக்கு எனதாக்கிக் கொண்டிருக்கிறேன்.
Will catchup soon Sir👍
====
Ever yours
Fan boy (man?!)
சசி S குமார்
(***புகைப்படங்கள்- கடந்த 12.6.22 அன்று க்ரேஸி மோகன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் (வாணி மகால்- சென்னை) நிகழ்வில், நான் எழுதிய “நேசனுக்காக வந்த ஹாசன்” என்ற வாழ்த்துக் கவிதையை Tokyo tamil sangam மற்றும் பொன்மாலைப்பொழுது துபாய் சார்பில் திரு. ரமேஷ் ராமகிருஷ்ணன் வழங்கிய போது… மேடையில் வைத்தே சில கணங்கள் அதை வாசித்த போது…
*** அபுதாபி நிகழ்வில் எனது புத்தகம்
“மெல்லச்சிறகசைத்து…” காத்திரமான வாசிப்பாளரின் கைகளில் சேர்ந்த போது…)
Comments
No comment yet.