அபுதாபி… 25.6.22 மாலை
இந்திய சமூக கலாச்சார மையம் அரங்கில்,
நடிகர், தயாரிப்பாளர் மற்றும், இயக்குநர்
கமல்ஹாஸன் அவர்களுடன் -சிறப்பு சந்திப்பு. IBPG - Indian business and professional group, The institute of Charted accountants of India Abu Dhabi chapters Ltd.,ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு.
விழா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்
தம்பி Firdhous Basha வின்
அன்பு அழைப்பின் பேரில், தம்பி Kausar Baig உடன் , அபுதாபி நிகழ்வுக்கு ...
முகப்பு
“இந்த உயரம் போதுமா …? பாருடா”
இன்னும் கொஞ்சம் அரைஅடி மேல “தூக்கலாம்…”
வியர்க்க வியர்க்க மின் விளக்குக்
கம்பத்தில் பள்ளித் தோழன் தாமோதரன்
1986 ஏப்ரல்
கடலூர் கூத்தப்பாக்கம் புறநகர். வீதி விளக்குக் கம்பத்தில் ஏறி பதாகையைக் கட்டிய சக கமல் ரசிகனாக பள்ளித்தோழன் தாமோதரன்…
கீழ் நின்று கொண்டு உத்தரவுகளும் ஆலோசனைகளும் வழங்கிக் கொண்டிருந்த நானும் நண்பன் நாகராஜனும் Narayan Nagarajan
மூன்றுக்கு இரண்டரை அடி மரச்சட்டகம் அதன்மேல் விரித்துக்கட்டப்பட்ட வேட்டித்துணி… அதன்மேல் ...
“மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்…
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்…"
கடலூர் புனித வளனார் பள்ளி அரங்கில், புரொஜக்டர் இரைச்சலையும் தாண்டி மிஸ் ஆக்னெஸ், தனது புடவைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவாறே விசும்பிய சப்தம் -- மூன்றாம் வகுப்பு மாணவனாக நினைவில் நிழலாடுகிறது...
பள்ளியில் என்னை கனிவான கண்டிப்பிற்குள்ளக்கிய மதர் சுப்பீரியர்,
ஆரம்ப பள்ளி நாட்களில் நிதமும் அலுமினிய டிபன் பாக்ஸ் திறந்து தரும் தாட்டியான அன்னமேரி அக்கா,
பள்ளி முடித்து ...
"தீபாவளி" சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்
எனவே,கடந்த வருட பதிவு - மற்றுமொரு முறை... இனிய நண்பர்களின் மீள் வாசிப்பிற்காக...
எத்தனை, எத்தனை தீபாவளி.
நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத் தக்கவை.
"தீபாவளி"
எத்தனை, எத்தனை தீபாவளி.....
ஒரு மாதம் முன்பே எடுத்து, தைக்கக் கொடுத்த துணி வாங்க நாலைந்து முறை அலைந்தும் அலுக்காத தீபாவளி...
அம்மாவோடு அடுப்படியில் வியர்க்க, வியர்க்க அதிரசம் தட்டிக்கொடுத்து, விரல் இடுக்குகள் வெல்லப்பாகு பிசுபிசுக்க, ...
"ஏதாவது செய்ய தான் நாமெல்லாம் இங்க இருக்கோம்... இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்... முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்..."
---முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க., சில நொடிகள் அசாத்திய அமைதி...மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில்
"Dead investment... பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை... ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் ...
ரீங்காரம்... ஒலித்தது எனது காதோரம்...
திரும்பினேன்.
“சுறுசுறுப்பிற்கு நீ அடிக்கடி சுட்டும் தேனீ நான்!
நண்டுக்கும் வண்டுக்கும் நாலறிவு என்றவனே...
நாலறிவன் நானுரைக்கிறேன்...
வாலறிவன் தான் தான் என்று செருக்கித் திரிந்தவன் நீ...
வால் நறுக்கி உனது இல்ல வாசல் அடைத்தது இயற்கை.
உனது ஆறாம் அறிவு,உனது மொழி,
உன்னத கண்டுபிடிப்பு,
நிலம், ஆணவம்,ராணுவம், அகந்தை,
அத்தனையும் அர்த்தமிழந்தது இன்று...
பார்வைக்குத் தெரியாத பகையைக் கூட வெல்ல இயலாதவன் நீ...
பிறர் துன்பம் அறிந்து கொள்ள முயலாதவன் நீ...
கற்றால் உடன் மறந்தவன் நீ...
இன்று… தொற்றால் வாடித் துவண்டவன் ...
நெற்றி புரளும் கேசம், நேர்மை நிறைந்த சுவாசம்
எங்களை- நெஞ்சில் சுமந்த பாசம்
அன்பு,அறம்...நேசம் - ஐயா,
உங்கள் நினைவை பேசும்- இன்று
இழந்து நிற்குது நம் தேசம்.
ஆய்வே வாழ்வென்று இருந்ததால்- உங்களை
ஓய்வே வந்தழைத்துச் சென்ற நாள்
உங்கள் சொல் கேட்டு,
மேகம் வழியனுப்பி கலம் விண்வெளி அடைந்தது - சாதனை
மேகாலயம் வழியனுப்பி கலாம் விண்வெளி அடைந்தது -வேதனை
வியப்பானதொரு விநோதக் கலவை நீங்கள்
அறிவுசால் அணு விஞ்ஞானி
அழகு மொழி கவி மெய்ஞானி!
உங்கள் கலம் விண் தொட்டது
உங்கள் கரம் மரக்கன்று நட ...
நூற்றாண்டின் கலைஞன் கமல்ஹாசன
இரண்டாம் வகுப்பு விடுமுறை காலம் என்பதாக நினைவு. நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் கடலூர் கமலம் திரை அரங்கில், புதிதாய் திறக்கப்பட்டு முதல் படமாய் திரையிடப் பட்டிருந்தது. அந்த சிவப்பான, ஸ்டெப் கட்டிங் வைத்த,வெளிர் நிற கண்விழிகள் கொண்ட அந்த இளைஞன், முன்பே திரையில்அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் திரைப்படங்களில் எனக்கு அறிமுகமான இளைஞன் தான் என்ற போதும், என்னை முழுமையாக சுவீகரித்துக் கொண்டது 1979-ல். அந்த வயதுகளில் ...
பண்ணைபுரத்து சித்தன்... பாமரருக்கும் பாட்டிசைத்த புத்தன்
பாவலரின் இளவல் - இசைக்கூட்டாளி - இசையை பொதுவுடமையாக்கி -பந்திவைத்த பாட்டாளி!
"ரூப் தேரா மஸ்தானா..." என முணுமுணுக்கத் தொடங்கிய தமிழ் உதடுகளில் அன்னக்கிளி " -யை அழுத்தமாய் பதித்தவன் நீ.
தமிழை சலவை செய்தவன் பாரதி! தமிழிசையை சலவை செய்தவன் நீ!
சொல் புதிது .. பொருள் புதிது... சுவை புதிது ... என்பான் பாரதி
இசைஞானி உனது இசை புதிது ... ஓசை புதிது...மெட்டு புதிது... தாளக்கட்டும் ...