ரீங்காரம்... ஒலித்தது எனது காதோரம்...
திரும்பினேன்.
“சுறுசுறுப்பிற்கு நீ அடிக்கடி சுட்டும் தேனீ நான்!
நண்டுக்கும் வண்டுக்கும் நாலறிவு என்றவனே...
நாலறிவன் நானுரைக்கிறேன்...
வாலறிவன் தான் தான் என்று செருக்கித் திரிந்தவன் நீ...
வால் நறுக்கி உனது இல்ல வாசல் அடைத்தது இயற்கை.
உனது ஆறாம் அறிவு,உனது மொழி,
உன்னத கண்டுபிடிப்பு,
நிலம், ஆணவம்,ராணுவம், அகந்தை,
அத்தனையும் அர்த்தமிழந்தது இன்று...
பார்வைக்குத் தெரியாத பகையைக் கூட வெல்ல இயலாதவன் நீ...
பிறர் துன்பம் அறிந்து கொள்ள முயலாதவன் நீ...
கற்றால் உடன் மறந்தவன் நீ...
இன்று… தொற்றால் வாடித் துவண்டவன் ...
Category: கவிதை
07
May
07
May
நெற்றி புரளும் கேசம், நேர்மை நிறைந்த சுவாசம்
எங்களை- நெஞ்சில் சுமந்த பாசம்
அன்பு,அறம்...நேசம் - ஐயா,
உங்கள் நினைவை பேசும்- இன்று
இழந்து நிற்குது நம் தேசம்.
ஆய்வே வாழ்வென்று இருந்ததால்- உங்களை
ஓய்வே வந்தழைத்துச் சென்ற நாள்
உங்கள் சொல் கேட்டு,
மேகம் வழியனுப்பி கலம் விண்வெளி அடைந்தது - சாதனை
மேகாலயம் வழியனுப்பி கலாம் விண்வெளி அடைந்தது -வேதனை
வியப்பானதொரு விநோதக் கலவை நீங்கள்
அறிவுசால் அணு விஞ்ஞானி
அழகு மொழி கவி மெய்ஞானி!
உங்கள் கலம் விண் தொட்டது
உங்கள் கரம் மரக்கன்று நட ...
15
Apr
பண்ணைபுரத்து சித்தன்... பாமரருக்கும் பாட்டிசைத்த புத்தன்
பாவலரின் இளவல் - இசைக்கூட்டாளி - இசையை பொதுவுடமையாக்கி -பந்திவைத்த பாட்டாளி!
"ரூப் தேரா மஸ்தானா..." என முணுமுணுக்கத் தொடங்கிய தமிழ் உதடுகளில் அன்னக்கிளி " -யை அழுத்தமாய் பதித்தவன் நீ.
தமிழை சலவை செய்தவன் பாரதி! தமிழிசையை சலவை செய்தவன் நீ!
சொல் புதிது .. பொருள் புதிது... சுவை புதிது ... என்பான் பாரதி
இசைஞானி உனது இசை புதிது ... ஓசை புதிது...மெட்டு புதிது... தாளக்கட்டும் ...