அறிமுகம்
சசி S குமார்
துபாய்
• பிறந்த ஊர்-நெல்லை
• வளர்ந்தது:கடலூரில்.
• வசிப்பது:அமீரகத்தில் 2004 முதல்
• பணி – திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பொறியாளர் – Planning & Coordn Engr DUBAI ELECTRICITY & WATER AUTHORITY
• அகவை நாற்பதுகளின் நிறைவில் …
அமீரக மேடைகளில் பரிச்சயமான இலக்கியபேச்சாளர்.எழுத்தாளர், நாடக, குறும்பட இயக்குநர், பாடலாசிரியர்.
இவர் எழுதி இயக்கிய “பேசும் பொற்சித்திரமே..” **குறும்படம் IFMF 2020நிகழ்வில் ஏற்பாட்டாளர் படைப்பாகத் திரையிடப்பட்டு,இயக்குநர்கள்*சந்தானபாரதி*அகத்தியன்,சித்ரா லக்ஷ்மண், நடிகர்இளவரசு ஆகியோர் பாராட்டைப் பெற்றது
இவர் எழுதி இயக்கிய,“பய -டேட்டா” – குறும்படம் அமீரக குறும்பட விழா-2021-ல்
பாராட்டு பரிசுகளைப் பெற்றது.
இவர் எழுதிய அமீரக வாழ்த்துப் பாடல், 2018-ல் துபாய் இந்திய துணைத்தூதரக அரங்கில் வெளியிடப்பட்டது
இவர் எழுதிய “மகத்துவர்” என்ற கோவிட் கால முன்களப் பணியாளர்கள் குறித்த வாழ்த்துப் பாடல், 2020-ல், அன்றைய தமிழ்த்துறை அமைச்சர் திரு மஃபாய் பாண்டியராஐன் அவர்களால் மருத்துவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
கிரேஸி மோகன்நினைவேந்தற் பாடல்- ஜூன் 2021 அன்று, உலகநாயகன் திரு கமல்ஹாசன் அவர்களால், காணொளி நிகழ்வில், உலகத் தமிழ்ச்சங்கங்களின் பெரு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இவர் எழுதி இயக்கிய நான்கு குறுநாடகங்கள் – அமீரக குறுநாடக விழாவில் 2016,17,18 & 19 ஆண்டுகளில் அமீரகத்தில் அரங்கேற்றி பரிசுகள் பெற்றன.
பேராசிரியர் சாலமன் பாப்பையா, திரு நெல்லைகண்ணன், முனைவர் திரு கு ஞானசம்பந்தன், திரு அப்துல் காதர், திரு ராஜா, தி்ரு மோகனசுந்தரம், திருமதி பாரதி பாஸ்கர், முன்னிலையில் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம்
டோக்கியோ தமிழ்ச் சங்கம் & பொன்மாலைப் பொழுது துபாய் இணைந்து வழங்கிக் கொண்டிருக்கும் அகமும், புறமும் இணைய – நேர்காணலில் 40-க்கும் மேற்பட்ட திரை, இசை, இயக்குநர் பிரபலங்களை அறிமுக வரவேற்பு வரிகள் வாசித்து தொடர்கிற அனுபவம்
– திருமதி பாரதி பாஸ்கர், முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோரை காணொளி நேர்காணல் அனுபவம்.
தொடர்கிற பல உலகளாவிய காணொளி மற்றும் மேடை நிகழ்வுகளில் தொடரும் கவியரங்க மற்றும் பட்டிமன்ற அனுபவங்கள்
அமீரக வாசகர்கள் மற்றும் எழுத்தாளர் குழுமத்தின் “வாசிப்பை நேசிப்போம்- தனிமையில் துணை…” தலைப்பில் நடந்தேறிய 4 புத்தக விமர்சனம் சார்ந்த எழுத்து மற்றும் காணொளிப் போட்டிகளில் அனைத்திலும் நடுவராக, இணைந்த அனுபவம்
பல நாடுகளில் பயணம் செய்த அனுபவங்களை எழுதிய “மெல்லச் சிறகசைத்து”- வம்சி புக்ஸ்-பயண நூல்- 2020 – சென்னை புத்தக விழாவில் எழுத்தாளர்எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா, பவா செல்லத்துரை, ஆகியோரால் வெளியிடப்பட்டது
• மனைவி: மீனாகுமாரி-கணினி ஆசிரியர்
•மகன்அர்விந்த் பாரதி- இளங்கலை ஊடகம் மற்றும்அருங்கலையியல் -பெரும்பான்மை அமீரகத் தமிழ் மக்கள் அறிந்த பலகுரல்- தொடர் நகைச்சுவை வளரிளம் கலைஞர்