“விக்ரம்” விமர்சனம்
“இந்த உயரம் போதுமா …? பாருடா”
இன்னும் கொஞ்சம் அரைஅடி மேல “தூக்கலாம்…”
வியர்க்க வியர்க்க மின் விளக்குக்
கம்பத்தில் பள்ளித் தோழன் தாமோதரன்
1986 ஏப்ரல்
கடலூர் கூத்தப்பாக்கம் புறநகர். வீதி விளக்குக் கம்பத்தில் ஏறி பதாகையைக் கட்டிய சக கமல் ரசிகனாக பள்ளித்தோழன் தாமோதரன்…
கீழ் நின்று கொண்டு உத்தரவுகளும் ஆலோசனைகளும் வழங்கிக் கொண்டிருந்த நானும் நண்பன் நாகராஜனும் Narayan Nagarajan
மூன்றுக்கு இரண்டரை அடி மரச்சட்டகம் அதன்மேல் விரித்துக்கட்டப்பட்ட வேட்டித்துணி… அதன்மேல் கன்னத்தில் விரல்கள் பிரித்து வைத்து கழுத்து வரை புகைப்படமாக உறைந்து நிற்கிற கமலஹாசன். சலங்கைஒலி பட பொங்கல் வாழ்த்துப் புகைப்படங்கள்.
ஸ்கெட்ச் பென்னால் எழுதிய டிஜிட்டல் எழுத்துகள். எங்களது பெயர்கள்….
“நானும் ஒரு தொழிலாளி” பட இடைவேளையில் கடலூர் பாடலி திரையரங்கில் பார்த்த விக்ரம் படத்தின் முன்னோட்டக் காட்சி மனதின் திரையில்.
9 ம் வகுப்பு விடுமுறை… தகிக்கும் அக்கினி வெய்யில்…
நாகராஜனின் பெற்றோர் ஊரில், வீட்டில்
இல்லாத காரணம்… விக்ரம் திரைப்படத்திற்கான ரசிகனின் பதாகை தயார் செய்கிற பரபரப்பு. டிஜிட்டல் எழுத்துகள் துண்டுத் துண்டாக பதாகையில் “விக்ரம்”
வாசிப்பு வேகமெடுத்து, சுஜாதா, பாலகுமாரன் அறிமுகமாகியிருந்த காலம். 14 வயது…
குமுதம் இதழில் புகைப்படங்களுடன் விக்ரம் தொடர் வாசித்த கிளர்ச்சி…
லிஸி முதுகோடு அணைத்து நிற்க துப்பாக்கியோடு கறுப்பு உடையில் கமலஹாசன்… சுஜாதாவின் சில்மிஷ வரிகள்… நினைவுகளில் பொங்கப்பொங்க.
தெருவோர மின்விளக்குக் கம்பத்தில் இன்னும் நினைவுகளில் இழை பிரிந்த கயிறு காற்றில்
அசைய “விக்ரம்…” வாழ்வில் முதன்முறையாக தெருமுனைக் கம்பத்தில்
பதாகை கட்டி ரசிகன் என்பதை ஊரறியப் பிகடனப்படுத்திக் கொண்ட ஆண்டு 1986.
29 May 1986 படம் வெளிவந்து,
36 ஆண்டுகள்…
ஒரு தலைமுறையின் காலம் 33 ஆண்டுகள் என்பார்கள்.
நேற்று 04.6.22 … துபாய் Burjuman VOX MAX திரையரங்கில் இரவு 11.30 மணிக்காட்சி நண்பர்களுடன்…
அன்றிருந்த அதே குதூகலமும், ஆரவாரமுமாக… “விக்ரம்”
====
“ங்..?!?!தா… டேய் அன்னைக்கு 1986ல
சலாமியாக்கு போயி டிம்பிள் கபாடியா, லிஸி சகிதம் அக்கினிபுத்ரனை ஏவுகணையை சுகிர்தராஜாவிடம் இருந்து மீட்டவன்டா நான்..” என்கிற கெத்தில் கமல் just ஊதி விட்டு நகர்கிற பாத்திரம். absolutely in BIGG BOSS mode…
உணர்வு பூர்வம் “ பத்தல பத்தல…”எனினும்…
Hats off.Kamal rocks.
விஜய் சேதுபதி, பஹத் பாஸில்… மற்றும் சகலரும் அருமை. அனி bro (நன்றி அர்விந்த் பாரதி) சிறப்பான பின்னணி இசை. குறுக்கப்பட்ட பாடல்களும் பாந்தம். கைதி, விக்ரம் படங்களின் மெல்லியத் தொடர்ச்சி இழை… அழகு.
அன்பறிவ் இருவருக்கும் ஆயிரம் பாராட்டுகள்.
லோகேஷ் கனகராஜின் உலகம் உணர்தவர்களை திரை மொழி
புரிந்தவர்களை இந்த திரைப்படம் உள்ளிழுத்து செரித்துக் கொள்ளும்.
இழையிழையாக, பிரிகிற செறிவான திரைக்கதை இந்தபடத்தின் பாடம்.
பாத்திரங்களின் நேர்த்தி, சின்னச்சின்ன சம்பவங்களின் அழகு. பிரபல நட்சத்திரங்களை கையாண்ட நேர்த்தி,
என தமிழில் ஒரு ஆக்ஷன் திரைப்படம்.
நீளத்தையும், நேர்த்தியற்ற CG நகைச்சுவைகளை தவிர்த்திருக்கலாம்.
1979… “நினைத்தாலே இனிக்கும்” நாள் தொடங்கி, தொடரும் ஒரு hard core கமல் ரசிகனாக, நிறைய இன்றும் நிறைய எதிர்பார்த்தாலும்,
“விக்ரம்” பெருமிதம் பெருமை…
Kamal sir… தமிழர்களும், தமிழ்மனங்களும் என்றும் உங்களின் கலைத்திறனைக் கொண்டாடும்…
Pls stay with us
as a veteran actor & as a versatile technician for ever.
====
சசி S குமார்
====
Comments
No comment yet.