இந்தியக் குடிமகன் – APJ அப்துல் கலாம்
நெற்றி புரளும் கேசம், நேர்மை நிறைந்த சுவாசம்
எங்களை- நெஞ்சில் சுமந்த பாசம்
அன்பு,அறம்…நேசம் – ஐயா,
உங்கள் நினைவை பேசும்- இன்று
இழந்து நிற்குது நம் தேசம்.
ஆய்வே வாழ்வென்று இருந்ததால்- உங்களை
ஓய்வே வந்தழைத்துச் சென்ற நாள்
உங்கள் சொல் கேட்டு,
மேகம் வழியனுப்பி கலம் விண்வெளி அடைந்தது – சாதனை
மேகாலயம் வழியனுப்பி கலாம் விண்வெளி அடைந்தது -வேதனை
வியப்பானதொரு விநோதக் கலவை நீங்கள்
அறிவுசால் அணு விஞ்ஞானி
அழகு மொழி கவி மெய்ஞானி!
உங்கள் கலம் விண் தொட்டது
உங்கள் கரம் மரக்கன்று நட மண் தொட்டது!
அன்று பதவியால்- முதல் இந்தியக் குடிமகன்
செய்த உதவியால் – எங்கள் இல்லத் தமிழ் மகன்
மெல்ல அசைந்தது உங்கள் அக்கினிச் சிறகு
ஒவ்வொரு சொல்லுக்கும் இசைந்து மலர்ந்தது மனது
ஐயா, கற்றலும், கற்பித்தலும் – கடமை என்றீர்கள்
உறங்கவிடா கனவே – எங்கள் உடமை என்றீர்கள்
இங்கு பல சிந்தனைகளை விதைத்துச் சென்றீர்கள்
இந்த நூற்றாண்டு, இளைஞர் மனதை வென்றீர்கள்!!
Comments
No comment yet.