அபுதாபி… 25.6.22 மாலை
இந்திய சமூக கலாச்சார மையம் அரங்கில்,
நடிகர், தயாரிப்பாளர் மற்றும், இயக்குநர்
கமல்ஹாஸன் அவர்களுடன் -சிறப்பு சந்திப்பு. IBPG - Indian business and professional group, The institute of Charted accountants of India Abu Dhabi chapters Ltd.,ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு.
விழா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்
தம்பி Firdhous Basha வின்
அன்பு அழைப்பின் பேரில், தம்பி Kausar Baig உடன் , அபுதாபி நிகழ்வுக்கு துபாயிருந்து, PCR சோதனை செய்து, Al Hosn செயலியில் பச்சைவண்ணம் ஒளிரச்செய்து… உலகநாயகனைக் காண ஒரு பயணம்.
தொற்றின் அதிகரிப்பு மற்றும்
சில நடைமுறை சிக்கல்கள் காரணம், விழா தாமதமானது. எட்டு மணியளவில் மேடையேறிய இந்தியத் திரையுலகின் அறுபதாண்டு கால ஆச்சர்யம் கமல்ஹாஸன், ஊடகவியலாளர் விக்ரந்த்தின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தார். இந்திய சமூக கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழா ஆதலால் ஆங்கில உரையாடல்.
பதினைந்தே நிமிடங்கள். அரங்கத்தில் கரவொலி அதிர அதிர…
இந்திய சமூக கலாச்சார ...
02
Jul
02
Jul
“இந்த உயரம் போதுமா …? பாருடா”
இன்னும் கொஞ்சம் அரைஅடி மேல “தூக்கலாம்…”
வியர்க்க வியர்க்க மின் விளக்குக்
கம்பத்தில் பள்ளித் தோழன் தாமோதரன்
1986 ஏப்ரல்
கடலூர் கூத்தப்பாக்கம் புறநகர். வீதி விளக்குக் கம்பத்தில் ஏறி பதாகையைக் கட்டிய சக கமல் ரசிகனாக பள்ளித்தோழன் தாமோதரன்…
கீழ் நின்று கொண்டு உத்தரவுகளும் ஆலோசனைகளும் வழங்கிக் கொண்டிருந்த நானும் நண்பன் நாகராஜனும் Narayan Nagarajan
மூன்றுக்கு இரண்டரை அடி மரச்சட்டகம் அதன்மேல் விரித்துக்கட்டப்பட்ட வேட்டித்துணி… அதன்மேல் கன்னத்தில் விரல்கள் பிரித்து வைத்து கழுத்து வரை புகைப்படமாக உறைந்து நிற்கிற கமலஹாசன். சலங்கைஒலி பட பொங்கல் வாழ்த்துப் புகைப்படங்கள்.
ஸ்கெட்ச் பென்னால் எழுதிய டிஜிட்டல் எழுத்துகள். எங்களது பெயர்கள்….
“நானும் ஒரு தொழிலாளி” பட இடைவேளையில் கடலூர் பாடலி திரையரங்கில் பார்த்த விக்ரம் படத்தின் முன்னோட்டக் காட்சி மனதின் திரையில்.
9 ம் வகுப்பு விடுமுறை… தகிக்கும் அக்கினி வெய்யில்…
நாகராஜனின் பெற்றோர் ஊரில், வீட்டில்
இல்லாத காரணம்… விக்ரம் திரைப்படத்திற்கான ரசிகனின் ...