“மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்…
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்…"
கடலூர் புனித வளனார் பள்ளி அரங்கில், புரொஜக்டர் இரைச்சலையும் தாண்டி மிஸ் ஆக்னெஸ், தனது புடவைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவாறே விசும்பிய சப்தம் -- மூன்றாம் வகுப்பு மாணவனாக நினைவில் நிழலாடுகிறது...
பள்ளியில் என்னை கனிவான கண்டிப்பிற்குள்ளக்கிய மதர் சுப்பீரியர்,
ஆரம்ப பள்ளி நாட்களில் நிதமும் அலுமினிய டிபன் பாக்ஸ் திறந்து தரும் தாட்டியான அன்னமேரி அக்கா,
பள்ளி முடித்து பல வருடங்கள் கடந்தபோதும், பார்த்த போதெல்லாம் பழைய பாசத்தில் என் கன்னம் திருகி, நலம் விசாரிக்கும் மேவீஸ் மிஸ்,
ரிக்க்ஷா ஓட்டிய லூர்து அண்ணன்,
“பச்சைக் கிளி ஓடும் , பறந்தது பறந்து பாடும்
குண்டு மாம்பழம் தேடும் , கூண்டில் அடைத்தால் வாடும்..."
-என்ற குழந்தைப் பாடலை அபிநயத்தோடு எனக்கு சொல்லித்தந்து நான்கு வயதில் என்னை மேடை ஏற்றி, அரங்கேற்றம் செய்து முதல் கைத்தட்டல் பெற்றுத்தந்த மிஸ் ஃபெல்சி…
---எல்லோரும் ...
08
May
07
May
"தீபாவளி" சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்
எனவே,கடந்த வருட பதிவு - மற்றுமொரு முறை... இனிய நண்பர்களின் மீள் வாசிப்பிற்காக...
எத்தனை, எத்தனை தீபாவளி.
நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத் தக்கவை.
"தீபாவளி"
எத்தனை, எத்தனை தீபாவளி.....
ஒரு மாதம் முன்பே எடுத்து, தைக்கக் கொடுத்த துணி வாங்க நாலைந்து முறை அலைந்தும் அலுக்காத தீபாவளி...
அம்மாவோடு அடுப்படியில் வியர்க்க, வியர்க்க அதிரசம் தட்டிக்கொடுத்து, விரல் இடுக்குகள் வெல்லப்பாகு பிசுபிசுக்க, பாமாயில் வெக்கையை சுவாசித்து, சுவாரஸ்யம் கூட்டிய தீபாவளி...
அப்பாவின் சைக்கிளில், கேரியரில் அமர்ந்து மடியில் ஒயர் கூடையில் கனக்கின்ற பட்டாசும், மத்தாப்பாய் மகிழ்ச்சி தெறிக்கும் மனசுமாய், வீடு சேர்ந்த தீபாவளி...
வாங்கிய வெடியை முறத்தில், தந்தி பேப்பர் தளமிட்டுப் பரத்தி மொட்டை மாடி வெயிலில் காய வைத்து காவல் காத்த தீபாவளி...
மேகம் பார்த்து, கண்களில் சோகம் கோர்த்து, மழைக்கு பயந்து, மனசு நனைத்த தீபாவளி...
அதிகாலை எண்ணைக் குளியலில், சீயக்காய் பொடி கண்களில் இறங்கி, ...
07
May
"ஏதாவது செய்ய தான் நாமெல்லாம் இங்க இருக்கோம்... இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்... முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்..."
---முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க., சில நொடிகள் அசாத்திய அமைதி...மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில்
"Dead investment... பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை... ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் காத்திருக்காங்க... உங்க பட்ஜெட் ல இதுக்கெல்லாம் பணமில்லேன்னாக்கூட இது நடக்கணும்... அதுக்குள்ள வழியைப் பாருங்க.."
---தண்ணீர் குடித்து விட்டு, கல்வி ஆலோசகர் நெ. து . சுந்தரவடிவேலு-வை அழைத்துக்கொண்டு, அறையிலிருந்து வெளியேறினார் முதல்வர்.. அதிகாரிகள் செய்வதறியாமல் எழுந்தனர். தத்தமக்குள் பேசிக்கொண்டு கலைந்தனர்.
சில வாரங்களுக்கு முன்…
1956 - நெல்லை அருகே , சேரன்மாதேவி... முதல்வரின் வாகனம் , அதற்கான அடையாளங்கள் இன்றி எளிமையாக விரைந்துகொண்டிருக்கிறது. வெயிலடிக்கும் வறண்ட வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேய்ந்துகொண்டிருக்கும் ...
07
May
ரீங்காரம்... ஒலித்தது எனது காதோரம்...
திரும்பினேன்.
“சுறுசுறுப்பிற்கு நீ அடிக்கடி சுட்டும் தேனீ நான்!
நண்டுக்கும் வண்டுக்கும் நாலறிவு என்றவனே...
நாலறிவன் நானுரைக்கிறேன்...
வாலறிவன் தான் தான் என்று செருக்கித் திரிந்தவன் நீ...
வால் நறுக்கி உனது இல்ல வாசல் அடைத்தது இயற்கை.
உனது ஆறாம் அறிவு,உனது மொழி,
உன்னத கண்டுபிடிப்பு,
நிலம், ஆணவம்,ராணுவம், அகந்தை,
அத்தனையும் அர்த்தமிழந்தது இன்று...
பார்வைக்குத் தெரியாத பகையைக் கூட வெல்ல இயலாதவன் நீ...
பிறர் துன்பம் அறிந்து கொள்ள முயலாதவன் நீ...
கற்றால் உடன் மறந்தவன் நீ...
இன்று… தொற்றால் வாடித் துவண்டவன் நீ...
நன்றி உனக்கு...
இன்று...
மனிதன் வாரா தோட்டங்களில்
மலர்கள் அதிகம் பூக்கின்றன...
மனம் போல மகரந்தச்சேர்க்கை நடக்கிறது...
சேதாரமில்லாமல் சேர்த்ததேன் கூடடைகிறது...
மனிதா... உன் பாதம் பட்ட
தரையில் புற்கள் கூட முளைப்பதில்லை
எங்கள் ஐந்தேஆண்டு வாழ்வுக்கிணையாய்
நீ ஆயுள் முழுதும் கூட உழைப்பதில்லை
====
லட்சம் பூக்கள் தொட்டு,
எமது எச்சில் துளிகள் பட்டு,
களமாடி சேகரம் செய்த தேனைக்
களவாடிக் குடிப்பவன் நீ...உறவாடிக் கெடுப்பவன் நீ...
சுறுசுறுப்பு வேறு… பரபரப்பு வேறு…
அறிவாயா?
ஒரு கோடி- மலர் நாடி -ஒரு ஜாடி
தேன் சேர்க்க... ஆயிரமாயிரம் மைல்கள் பறப்போம்- அது சுறுசுறுப்பு!
வேலை என்ன? ...
07
May
நெற்றி புரளும் கேசம், நேர்மை நிறைந்த சுவாசம்
எங்களை- நெஞ்சில் சுமந்த பாசம்
அன்பு,அறம்...நேசம் - ஐயா,
உங்கள் நினைவை பேசும்- இன்று
இழந்து நிற்குது நம் தேசம்.
ஆய்வே வாழ்வென்று இருந்ததால்- உங்களை
ஓய்வே வந்தழைத்துச் சென்ற நாள்
உங்கள் சொல் கேட்டு,
மேகம் வழியனுப்பி கலம் விண்வெளி அடைந்தது - சாதனை
மேகாலயம் வழியனுப்பி கலாம் விண்வெளி அடைந்தது -வேதனை
வியப்பானதொரு விநோதக் கலவை நீங்கள்
அறிவுசால் அணு விஞ்ஞானி
அழகு மொழி கவி மெய்ஞானி!
உங்கள் கலம் விண் தொட்டது
உங்கள் கரம் மரக்கன்று நட மண் தொட்டது!
அன்று பதவியால்- முதல் இந்தியக் குடிமகன்
செய்த உதவியால் - எங்கள் இல்லத் தமிழ் மகன்
மெல்ல அசைந்தது உங்கள் அக்கினிச் சிறகு
ஒவ்வொரு சொல்லுக்கும் இசைந்து மலர்ந்தது மனது
ஐயா, கற்றலும், கற்பித்தலும் - கடமை என்றீர்கள்
உறங்கவிடா கனவே - எங்கள் உடமை என்றீர்கள்
இங்கு பல சிந்தனைகளை விதைத்துச் சென்றீர்கள்
இந்த நூற்றாண்டு, இளைஞர் மனதை வென்றீர்கள்!!