நூற்றாண்டின் கலைஞன் கமல்ஹாசன
இரண்டாம் வகுப்பு விடுமுறை காலம் என்பதாக நினைவு. நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் கடலூர் கமலம் திரை அரங்கில், புதிதாய் திறக்கப்பட்டு முதல் படமாய் திரையிடப் பட்டிருந்தது. அந்த சிவப்பான, ஸ்டெப் கட்டிங் வைத்த,வெளிர் நிற கண்விழிகள் கொண்ட அந்த இளைஞன், முன்பே திரையில்அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் திரைப்படங்களில் எனக்கு அறிமுகமான இளைஞன் தான் என்ற போதும், என்னை முழுமையாக சுவீகரித்துக் கொண்டது 1979-ல். அந்த வயதுகளில் புரியாத நடிப்பு, புரியாத சிக்கலான பாத்திரப் படைப்பு என்றாலும், அந்த இளைஞன் எனது பால்ய கால நினைவுகளில் பதிந்து போனது, எனது ரசனைத் தளம் நல்வழியில் விரிவடைந்ததற்கான மூலக்கூறு. நேர்த்தி... நேர்த்தி ... நேர்த்தி...திரைக்கலையின் உச்ச நேர்த்தியைத் தொட அரைநூற்றாண்டாக இடையறாது முயன்றுகொண்டே இருக்கும் பெருங்கலைஞன். காண்போரின் எதிர்பார்ப்பிற்கு சற்றேனும் அதிகமாக திறன் காட்டி வியக்கச் செய்யும் முனைப்பை ஒரு மனிதன் அலுப்பின்றி இத்தனை காலமா தொடந்து நிகழ்த்த இயலும்?
கமல்ஹாசன் ...
18
Apr
15
Apr
பண்ணைபுரத்து சித்தன்... பாமரருக்கும் பாட்டிசைத்த புத்தன்
பாவலரின் இளவல் - இசைக்கூட்டாளி - இசையை பொதுவுடமையாக்கி -பந்திவைத்த பாட்டாளி!
"ரூப் தேரா மஸ்தானா..." என முணுமுணுக்கத் தொடங்கிய தமிழ் உதடுகளில் அன்னக்கிளி " -யை அழுத்தமாய் பதித்தவன் நீ.
தமிழை சலவை செய்தவன் பாரதி! தமிழிசையை சலவை செய்தவன் நீ!
சொல் புதிது .. பொருள் புதிது... சுவை புதிது ... என்பான் பாரதி
இசைஞானி உனது இசை புதிது ... ஓசை புதிது...மெட்டு புதிது... தாளக்கட்டும் புதிது!
வெள்ளிக்கொலுசு ஒலிக்க வீட்டுத் தாழ்வாரத்தில் நடந்த தமிழ்த் திரையிசை -உன் வரவால் -வயல் வரப்புகளில் தண்டையணிந்து நடை போட்டது.
சாதிக்குள் வைத்திருந்த சங்கீதத்தை -வீதிக்குக் கொண்டுவந்து
சாதிக்கச் செய்தவன் நீ...அரை நூற்றாண்டாய் இசையை ஆதிக்கம் செய்தவன் நீ!
உனது ஹார்மோனியம் இசைத்தால்,கேட்கும் யார்மேனியும் வசமிழக்கும்.
உன் குழலோசை கேட்டால் எங்கள் உயிரோசை உற்சாகம் கொள்ளும்
உன் கம்பி வாத்தியங்கள்காதோடு பேசுகையில் எங்கள் நாடி நரம்புகள் நாண் ஏற்றி "அன்பு" தொடுக்கும்
ஒரு மருத்துவ ஆய்வறிக்கை சொல்கிறது...கடந்த 30 ஆண்டுகளில் ...